ஆலங்குளம் அருகே குழாய் உடைந்து பெருக்கெடுத்த குடிநீர்

ஆலங்குளம் : ஆலங்குளம் அருகே குழாய் உடைந்து குடிநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கிராமப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. முக்கூடல் அருகே உள்ள நந்தன்தட்டை பகுதியில் இருந்து தாமிரபரணி தண்ணீர் பைப் லைன் மூலம் வாசுதேவநல்லூர், புளியங்குடி பகுதிகளுக்கு ஆலங்குளம், அத்தியூத்து, சுரண்டை ஆகிய ஊர்களின் வழியாக கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் அத்தியூத்து ஊருக்கு அருகில் தனியார் செல்போன் டவருக்கு இணைப்பு எடுப்பதற்காக நெல்லை- தென்காசி மெயின் ரோட்டின் ஓரமாக  குழி தோண்டினர். அப்போது  வாசுதேவநல்லூர் கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியது. ஆறாக பெருக்கெடுத்த குடிநீர், அருகிலுள்ள தோட்டம் மற்றும் சாலையோரம் பெருகி குளம்போல் காட்சியளித்தது. அப்பகுதி கிராம மக்கள், குடிநீர் வடிகால் வாரியத்துக்கு தகவல் தெரிவித்தனர். குழாய் உடைப்பால் பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் குடிநீர் தடைபட்டது.  உடைந்த குழாயை சீரமைத்து இன்று (30ம் தேதி) மாலைக்குள் வாசுதேவநல்லூர் பகுதி மக்கள் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: