சென்னை : சென்னையைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் ஆழ்கடல் பகுதியில் உள்ள நெகிழிகளை சேகரித்து கடலை சுத்தம் செய்து வருவது பாராட்டுகளை பெற்று வருகிறது. சென்னை காரப்பாக்கத்தைச் சேர்ந்த நீச்சல் வீரரின் 7 வயது மகள் ஆராதனா. சிறு வயதில் இருந்தே கடல் மற்றும் அதை சார்ந்த விவகாரங்களில் அதிக ஆர்வம் உடையவர். தனது விடுமுறை நாட்களில் கடற்கரையில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தி வந்தவர்.
