பாலக்கோடு அருகே பரபரப்பு நிலத்தகராறில் விவசாயியை ஊரைவிட்டு தள்ளி வைத்து கட்டப்பஞ்சாயத்து

*குடும்பத்துடன் விவசாய நிலத்தில் தஞ்சம்

பாலக்கோடு : தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நலத்தகராறு காரணமாக கட்டப்பஞ்சாயத்து செய்து விவசாயிைய ஊரைவிட்டு தள்ளி வைத்ததால், குடும்பத்தினர் விவசாய நிலத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்ைப ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பேளாரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் இடும்பன். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த உறவினர்களுக்குமிடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இதுகுறித்து ஊர் பஞ்சாயத்தில் முறையிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக ஊர் கவுண்டர்கள் ஒன்று சேர்ந்து, கடந்த 13ம் தேதி இடும்பன் மற்றும் அவரது சகோதரர் ஞானவேல், தந்தை கோவிந்தன் ஆகியோரை அழைத்து கட்டப்பஞ்சாயத்து பேசியுள்ளனர். அப்போது, இடும்பன் குடும்பத்தாரிடம் ₹25 ஆயிரம் அபராதம் வசூலித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 24ம் தேதி மேலும் அபராதமாக ₹2லட்சம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். அப்போது, பணத்தை கொடுத்தால் மட்டுமே, ஊருக்குள் வர வேண்டும் என கூறி ஒதுக்கி வைத்துள்ளனர்.

இதுகுறித்து இடும்பன் மற்றும் அவரது குடும்பத்தினர், பாலக்கோடு காவல் நிலையம், தர்மபுரி மாவட்ட எஸ்பி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பலமுறை புகார் கொடுத்துள்ளனர். ஆனால், நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த இடும்பன் தனது விவசாய நிலத்தில் குடும்பத்துடன் நேற்று தஞ்சமடைந்தார்.

மேலும், உரிய நீதி கிடைக்கும் வரை விவசாய நிலத்திலேயே குடும்பத்தோடு தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.

அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்திற்கு செல்லாததால், நேற்று இரவு வரை காத்திருந்தவர்கள், அருகில் உள்ள உறவினர் வீட்டில் தஞ்சமடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: