பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு ரூ.8 லட்சத்தில் ஆர்ஓ பிளான்ட் தயார்

செங்கல்பட்டு: காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது இதற்கான புதிய அலுவலக கட்டிடம் வெண்பாக்கத்தில் கட்டப்படுகிறது தற்காலிகமாக பழைய சப் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறது.

இங்கு வாரம் தோறும் மக்கள் குறை தீர் கூட்டம் உள்பட பல்வேறு தேவைகளுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தாசில்தார், சப் கலெக்டர் அலுவலகங்களுக்கும் தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கு, குடிநீர் வசதி செய்யவில்லை.

இதனால் மனு கொடுக்க வரும் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர். இதேபோல் அலுவக வளாகத்தில் தேனீர் கடை, ஜெராக்ஸ் கடைகளும் இல்லாமல் இருந்தது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கயை ஏற்று கலெக்டர் ராகுல்நாத், உடனடியாக குடிநீர் பிளாண்ட் அமைக்கவும் தேனீர் மற்றும் ஜெராக்ஸ் கடைகள் அமைக்க உத்தரவிட்டார் அதன்படி மகளிர் சுய உதவிக்குழு சார்பில் 2 பங்க் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.8 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி, ஒருசில நாட்களில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வர உள்ளது இதற்கான பணிகளை கலெக்டரின் நேர்முக உதவியாளர்.செல்வம் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.

அதில், 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாராகி வருவதாகவும். கலெக்டர் அலுவலகம் வரும் பொதுமக்கள் எந்நேரமும் குடிநீரை பருகலாம். குடிநீர் தேவைக்கு இனி வெளியில் சென்று பணம் கொடுத்து வாங்கவேண்டாம். அலுவலக ஊழியர்களும் இந்த குடிநீரை  யன்படுத்தி கொள்வார்கள்  விரைவில் கலெக்டர் இந்த பிளான்ட்டை திறந்து வைக்க உள்ளார் என கூறப்படுகிறது.

Related Stories:

>