ஆந்திராவில் தமிழக பக்தர்கள் சென்ற காரை வழிமறித்து கொள்ளை!: போலீஸ் உடையில் வந்த மர்ம கும்பல் துணிகரம்..!!

ஹைதராபாத்: ஆந்திராவில் தமிழக பக்தர்கள் சென்ற காரை வழிமறித்து திருடிச் சென்ற இரண்டு பேரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கோவிலில் தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊருக்கு காரில் திரும்பி கொண்டிருந்தனர். பங்காரத்னம் அருகே வந்த போது கிராமம் அருகே போலீஸ் உடையில் காரை வழிமறித்த மர்ம கும்பல், சோதனை செய்ய வேண்டும் என கூறி காரில் இருந்தவர்களை கீழே இறங்க வைத்தனர். அப்போது போலீஸ் உடையில் இருந்த ஒரு நபர் காரில் ஏறி ஓற்றி சென்றுவிட்டார்.

அவருடன் வந்த இருவரும் தப்பியோட முயன்ற போது பொதுமக்கள் உதவியுடன் சுற்றிவளைத்து பிடித்து அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கர்நாடக மாநிலம் கே.ஜி.எஃப் பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. ஆந்திரா - தமிழக எல்லையில் போலீசார் என கூறி அடிக்கடி வழிப்பறி செய்து வந்ததை கண்டறிந்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காரில் தப்பி சென்ற நபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழக - ஆந்திர எல்லையில் வழிப்பறி ஏற்படுவது வாடிக்கை எனவும் புகார் எழுந்திருக்கிறது.

Related Stories: