2024க்கு முன்பு மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 1000-ஆக உயர்த்த பாஜக திட்டம்!: காங். மூத்த தலைவர் திவாரி ட்வீட்..!!

டெல்லி: அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஆயிரத்திற்கும் அதிகமாக உயர்த்த மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு திட்டமிட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரான மணீஷ் திவாரி 2024ம் ஆண்டுக்கு முன்பே மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமாக உயர்த்துவதற்கான முன்மொழிவு இருப்பதாக பாரதிய ஜனதா எம்.பி.க்கள் கூறியதாக ட்வீட் செய்துள்ளார். டெல்லியில் தற்போது கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற மக்களவையில் 1000 எம்.பி.க்கள் அமரும் வசதியுடன் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் முன்பாக பொது விவாதம் அவசியம் என்று மணீஷ் திவாரி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில் அவரது ட்வீட் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. தொடர்ந்து, இந்தியா போன்ற பெரிய ஜனநாயக நாட்டில் கூடுதல் மக்கள் பிரதிநிதிகள் அவசியம் என்றாலும் எம்.பி.க்கள் எண்ணிக்கை அதிகரிப்பு மக்கள் தொகை அடிப்படையில் இருந்தால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் பங்களிப்பு பெரிதும் குறைந்துவிடும் என்பதால் அதை ஏற்க முடியாது என்று காங்கிரஸ் எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: