சொல்லிட்டாங்க...

பெகாசஸ் உளவு மென்பொருள் மூலமாக தலைவர்களின் செல்போன் உரையாடலை ஒட்டுக்கேட்ட விவகாரத்தில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தேச துரோகம் செய்துள்ளனர்.  :- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

சென்னை 2வது விமான நிலைய திட்டத்துக்கு தமிழக  அரசு, மத்திய அரசு, விமான நிலைய ஆணைய மூத்த  அதிகாரிகளை கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்க வேண்டும்.   :-பாமக நிறுவனர் ராமதாஸ்.

பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் கட்சி தலைவர்கள், நீதிபதிகள், ஒன்றிய அமைச்சர்களுடைய செல்போன் உரையாடல்  ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்.    :- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்.

மேற்கு வங்க மாநிலத்தில் என் மீது போடப்பட்டுள்ள எல்லா குற்ற வழக்குகளையும்  சிபிஐக்கு மாற்றுவதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.    :- மேற்கு வங்க எதிர்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி.

Related Stories:

>