செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை விவாதிக்க வேண்டும்: முத்தரசன் பேட்டி

திருத்துறைப்பூண்டி: திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று அளித்த பேட்டி: நாட்டில் எல்லா கட்சி தலைவர்களுடைய தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்கப்படுகிறது. இது அப்பட்டமான ஜனநாயக விரோத செயலாகும். அரசு பதில் சொல்ல வேண்டும் என்ற முறையில்தான் நாடாளுமன்றத்தில் கோரிக்கை குறித்து விவாதிக்க வேண்டும். விவாதிக்க தயார் என்று பிரதமர் வெளியில் பேசுகிறார். ஆனால் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு தயாராக இல்லை. புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வில்லை என்றால் டெல்லியில் மட்டுமல்ல, நாடு முழுவதும் போட்டி நாடாளுமன்ற கூட்டத்தை தொழிலாளர்களுடன் இணைந்து நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.  இவ்வாறு முத்தரசன் கூறினார்.

Related Stories:

>