பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தஞ்சை, திருவையாறில் சிறப்பு தொழுகை-திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

தஞ்சை : தஞ்சையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தஞ்சை ஆத்துப்பாலம் ஜும்மா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது, கீழவாசல் அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள், இஸ்லாமிய பெண்கள் பங்கேற்றனர்.திருவையாறு:திருவையாறு அடுத்த மேலத்திருப்புந்துருத்தி, கண்டியூர் முகமதுபந்தர், நடுக்கடை ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத்தை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. முஸ்லிம்கள் கலந்துகொண்டு ஒருவருக்கொருவா் பக்ரீத் வாழ்த்துக்களை தொிவித்துக்கொண்டனா்.

கொரானா தொற்று குறைந்த நிலையில் தற்போது பக்ரீத் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பள்ளிவாசலில் நேற்று மேலத்திருப்பந்துருத்தி முகைதீன் ஆண்டவர் பூங்கா அருகில் உள்ள பெரிய பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

சிறப்பு தொழுகையை ஜமாஅத் தலைவர் ஜாஹிர் உசேன் தலைமையில் முகமது ஆரிப் கலந்து கொண்டு தொழுகை நடத்தினார். மேலும் அரசு அறிவுறுத்தலின்படி முக கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு அனைவரும் தொழுகையில் கலந்து கொண்டனர். இதேபோல் கண்டியூர், முகமதுபந்தா், நடுக்கடை ஆகிய பள்ளிவாசல்களில் பக்ரீத் தொழுகை நடைபெற்றது.

பட்டுக்கோட்டை:

பக்ரீத் பண்டிகையையொட்டி பட்டுக்கோட்டையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். குறிப்பாக வடசேரிரோடு முகைதீன்ஆண்டவர் பெரிய பள்ளிவாசலில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

கும்பகோணம்:

கும்பகோணம், மேலக்காவேரி, திருப்பனந்தாள், தத்துவாஞ்சேரி, கோணுளாம்பள்ளம், கருப்பூர், செறுகடம்பூர், சிக்கல் நாயக்கன்பேட்டை, திருலோகி, கதிராமங்கலம், சோழபுரம், திருமங்கலக்குடி , ஆடுதுறை என பல்வேறு மசூதிகளில் இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.இஸ்லாமியர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

Related Stories: