முக்கிய செய்தி இந்தியா இரண்டாவது நாளாக ராஜஸ்தான் மாநிலம் பிகானிரியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 4.8-ஆக பதிவு Jul 22, 2021 ராஜஸ்தான் மாநிலம் பிகானி ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் பிகானிரியில் கடந்த இரண்டு நாட்களில் இரண்டாவது முறையாக இன்று காலை 7.42 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 4.8-ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் தொடர்பான பாதிப்புகள் குறித்து உறுதியான தகவல் ஏதுவும் வெளியாகவில்லை, கடந்த சில வாரங்களாக வடமாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ராஜஸ்தான் மாநிலம் பிகானிரியில் நேற்று முன்தினம் அதிகாலை 5.24 மணிக்கு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.3ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர் நிலநடுக்கத்தால் அங்குள்ள பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று ஏற்பட்ட நிலநடுக்கமானது பிகானிர் பகுதியில் 110 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கு சில மணி நேரத்திற்கு முன் மேகாலயாவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் புவியியல் மையம் தெரிவித்திருக்கிறது. மேலும் நிலநடுக்கம் தொடர்பான பாதிப்புகள் குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. நேற்று ஒரே நாளில் 3 இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
வலுக்கும் எதிர்ப்பு!: இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் கொடைக்கானலில் உள்ள விடுதிகள், ஓட்டல்கள் கோடை சீசன் முழுவதும் மூடப்படும் என எச்சரிக்கை..!!
முதலமைச்சர், பிரதமராக இருந்தும் என் மீது ஒரு ஊழல் புகார் கூட எழுந்ததில்லை: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
கர்நாடகத்தை உலுக்கும் ஆபாச வீடியோ வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவை ஒன்றிய அரசு காப்பாற்றுவதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு..!!
காணாமல் போன நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..!!
தென்தமிழகம், கேரளா உள்பட அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
நெருங்கும் அட்சய திரிதியை!: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,800-க்கு விற்பனை.. நகை பிரியர்கள் குஷி..!!
கோடை விடுமுறையை ஒட்டி பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து பல நகரங்களுக்கு விமான சேவைகள் அதிகரிப்பு..!!
தமிழகத்தில் இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரேபரேலி தொகுதியில் ராகுல் போட்டி: பிரியங்கா போட்டியிடுவார் என கருதிய நிலையில் அமேதி தொகுதியில் கே.எல்.சர்மா நிற்கிறார்
ராஜீவ் காந்தி குறித்த விமர்சன விவகாரம்; பிரதமர் மோடியால் புரிந்துகொள்ள முடியாது: தியாகம் குறித்து பிரியங்கா உருக்கம்
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் முரண்பாடு கவலை அளிக்கிறது: சீதாராம் யெச்சூரி
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!