அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகங்களில் ஏற்பட்ட இழப்பீடு, ஊழல்: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ஐ.டி. ரெய்டு

கரூர்: கரூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்றுவருகிறது. ஐ.டி. சோதனையை ஒட்டி எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டின் முன்பு 20-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளார். அமைச்சராக எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருந்தபோது கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கரூாங தொகுதியில் செந்தில் பாலாஜியை எதிர்த்து போட்டியிட்டு எம்.ஆர்.விஜயபாஸ்கர் தோற்றிருந்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். 

அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் 20 இடங்களிலும், சென்னையில் ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடப்பதையொட்டி போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகங்களில் ஏற்பட்ட இழப்பீடு, ஊழல் தொடர்பாக அதிகாாிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

Related Stories: