திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கலெக்டர் பா.முருகேஷ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழ்கிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில். இங்கு, 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வருவதற்கு லட்சக்கணக்கான மக்கள் வருகை புரிகின்றனர். ஆனால், கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமலில் உள்ளதால், பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரமான 23ம் தேதி(நாளை) காலை 10.38 முதல், நாளை மறுதினம் காலை 08.51 வரை, கிரிவலம் வருவதற்கு அனுமதி கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: