குடும்பத்தினர் கோரிக்கை வைத்தால் நளினி, முருகனுக்கு பரோல்: அமைச்சர் ரகுபதி பேட்டி

வேலூர்: வேலூர் மத்திய சிறை மற்றும் பெண்கள் சிறையில் சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது: வேலூர் மத்திய சிறையில் 742 பேரும், பெண்கள் சிறையில் 97 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள மருத்துவமனை, சமையல் கூடம், கைதிகள் தங்கும் இடம் ஆகியவற்றை ஆய்வு செய்தோம். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன், நளினி, சாந்தன் ஆகியோரிடம் குறைகளை கேட்டறிந்தேன்.

அப்போது முருகன், நளினி இருவரும்  பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை வைத்தால் 30 நாட்களுக்கு பரோல் வழங்க அரசு தயாராக உள்ளது. நீண்ட நாட்கள் பரோல் வழங்க முடியாது. கோர்ட் மூலம் மட்டுமே பரோலை நீட்டிக்க முடியும். கோர்ட் உத்தரவிட்டால் பரோல் நீட்டிக்க அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: