மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திருக்கழுக்குன்றம்:  கல்பாக்கம் அடுத்த வெங்கப்பாக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, 11 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டார். அச்சம்பவத்தில், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை சம்பவத்தை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நிர்வாகிகள் ஜெயந்தி தலைமை தாங்கினார். வாலண்டினா, மனோன்மணி, கலையரசி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, கைது செய்த குற்றவாளியை பிணையில் விடக்கூடாது. கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Related Stories: