கேரள ஐகோர்ட் வேதனை கொலைக்களமாக மாறும் புகுந்த வீடு

திருவனந்தபுரம்: கேரளாவில்  சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான வரதட்சணை கொடுமை சாவுகள் அதிகரித்து  வருகின்றன. இந்நிலையில், திருவனந்தபுரம்  அருகே வட்டப்பாறை பகுதியை சேர்ந்த சிஜோ ராஜன் என்பவரின் மனைவி, வட்டப்பாறை  போலீசில் வரதட்சணை புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் சிஜோ ராஜன்,  அவரது பெற்றோர், உறவினர் மீது வரதட்சணை கொடுமை வழக்குப்பதிவு செய்தனர். இதனால், சிஜோ ராஜன் குடும்பத்தினர் முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதை விசாரித்த நீதிபதி ஷெர்சி, ‘‘கேரளாவில் சமீபகாலமாக அதிகரித்து வரும் வரதட்சணை   என்ற கொடிய பழக்கத்தை நிறுத்தியே ஆக வேண்டும்.  பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தப் படுகின்றனர்.  மேலும், அவர்களின் சொத்துக்களை கணவர் வீட்டினர் அபகரிக்கின்றனர்.  இது தொடர்பாக, கணவர் வீட்டினர் மீது எத்தனையோ  வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்ற போதிலும் எந்த பலனும் ஏற்படவில்லை.

கணவன்  வீடு பெண்களின் கொலைக்களங்களாக மாறி வருவது வேதனை அளிக்கிறது. இந்த  சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன் ஜாமீன் அளித்தால் அது  தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். எனவே, அவர்களின் முன்ஜாமீன் தள்ளுபடி செய்யப்படுகிறது,’  என்று அறிவித்தார்.

Related Stories: