வெள்ளத்தில் மூழ்கியது மும்பை: புறநகரில் 120 மி.மீ மழை பதிவு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தென்மேற்குப் பருவமழை தொடங்கி பெய்து வருவதால், நகரின் பெரும்பாலான சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் ரயில் தண்டவாளம் மழைநீரில் மூழ்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நகரில் பெய்த கனமழையைத் தொடர்ந்து மும்பையின் தஹிசார் பகுதி நீரில் மூழ்கியது. மும்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  அடுத்த 24 மணிநேரத்தில், நகரத்திலும் புறநகர்ப் பகுதிகளிலும் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கணித்துள்ளது.

மும்பை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு மற்றும் இன்று அதிகாலை பெய்த மழையால் உள்ளூர் ரயில்கள் தாமதமாக இயங்கின. காலை 8.30 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேரத்தில் மும்பை நகரில் 64.45 மி.மீ மழை பெய்தது. கிழக்கு புறநகர்ப் பகுதிகள் 120.67 மி.மீ மற்றும் மேற்கு புறநகர்ப் பகுதிகள் 127.16 மி.மீ மழை பெய்தது. இன்றிரவு வரை மும்பை தொடர்ந்து மிதமான மற்றும் தீவிரமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

Related Stories: