ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ஆன்லைன் வானொலி மூலம் மாணவர்களுக்கு கல்வி!: அரசு பள்ளி ஆசிரியர்கள் இணைந்து புது முயற்சி..!!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆன்லைன் வானொலி மூலம் பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட அரசு ஆசிரியர்கள் ஒன்றிணைந்து வானொலி மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதில் பல்வேறு ஆசிரியர்கள் தங்கள் துறை சார்ந்த வகுப்பு மற்றும் நீதிநெறி கதைகளை ஆடியோவாக பதிவிட்டு வருகின்றனர். இதனை மாணவர்கள் டவர் சரியாக கிடைக்காத இடத்திலும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

சோம்பு சமுத்திரம், எசையனூர், சோளிங்கர் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆசிரியர்கள் குழுக்களாக இணைந்து மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த முயற்சியால் மாணவர்களின் கற்கும் ஆர்வம் அதிகரித்திருப்பதாகவும் ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையம் மூலம் கற்பதை விட வானொலியில் ஆடியோவாக படிப்பது எளிதாக உள்ளது என்று மாணவர்களும் கருத்து கூறியுள்ளனர்.

Related Stories: