செயின்ட் லூசியா: வெ.இண்டீசுக்கு எதிரான டி20 தொடரை இழந்த ஆஸ்திரேலியா 4வது ஆட்டத்தில் வென்று முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 5 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 ஆட்டங்களில் தோற்றதால் ஆஸ்திரேலிய தொடரை ஏற்கனவே இழந்து விட்டது. இந்நிலையில் 4வது டி20 ஆட்டம் செயின்ட் லூசியாவில் நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் களம் கண்ட ஆஸி 20ஓவர் முடிவில் 6விக்கெட் இழப்புக்கு 189ரன் எடுத்தது. ஆஸி தரப்பில் மிட்செல் மார்ஷ் 75(44பந்து, 4பவுண்டரி, 6 சிக்சர்), கேப்டன் ஆரோன் பிஞ்ச் 53(37பந்து, 5பவுண்டரி, 3சிக்சர்) ரன் விளாசினார். வெ.இண்டீஸ் தரப்பில் ஹைடன் வால்ஷ் 3 விக்கெட் அள்ளினார். அதன் பிறகு 190 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெ.இண்டீஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சிம்மோன்ஸ் 72(48பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்), லிவீஸ் 31(14பந்து, 4பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி நல்ல தொடக்கம் தந்தனர்.