வடகிழக்கு நாட்டு மருத்துவ மையத்தை வடகிழக்கு ஆயுர்வேதம் மற்றும் நாட்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் என பெயர் மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி : பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வடகிழக்கு நாட்டு மருத்துவ மையத்தை வடகிழக்கு ஆயுர்வேதம் மற்றும் நாட்டு மருத்துவ ஆராய்ச்சி மையம்  என்று பெயர் மாற்றி ஆணை பிறப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

அருணாச்சலப் பிரதேசத்தின் பசிகாட்டில் உள்ள ஆயுர்வேதம் மற்றும் நாட்டு மருத்துவ மையத்தில் தரமான கல்வி மற்றும் ஆராய்ச்சியை வழங்குவதற்காக, வடகிழக்கு நாட்டு மருத்துவ மையத்தை  வடகிழக்கு ஆயுர்வேதம் மற்றும் நாட்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் என்று பெயர் மாற்ற முன்மொழியப்பட்டது. இந்த மாற்றங்கள் குறிப்பாணைகள் மற்றும் விதிகளிலும் மேற்கொள்ளப்படும்.

நாட்டு மருந்து மையத்துடன் ஆயுர்வேதமும் இணைக்கப்படுவதால் வடகிழக்குப் பகுதிகளில் உள்ள மக்கள் நாட்டு மருந்து மற்றும் ஆராய்ச்சியில் தரமான கல்வியறிவு மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு மிகவும் பயனளிக்கும். இந்தியாவில் ஆயுர்வேதம் மற்றும் நாட்டு மருந்து பயிலும் மாணவர்கள் மட்டுமல்லாமல் அண்டை நாடுகளான திபெத், பூட்டான், மங்கோலியா, நேபாளம், சீனா மற்றும் இதர மத்திய ஆசிய நாடுகளின் மாணவர்களுக்கும் இந்த மையம் பல்வேறு வாய்ப்புகளை அளிக்கும்.

Related Stories: