ஊட்டி - கூடலூர் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் இரவு ஊட்டி - கூடலூர் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் சாரல் மழை பெய்த போதிலும் ஊட்டி, கூடலூர், பந்தலூர் போன்ற பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. மேலும், பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஊட்டி - கூடலூர் சாலையில் பட்டர் என்ற பகுதியில் சாலையின் குறுக்கே ராட்சத மரம் ஒன்று விழுந்தது போக்குவரத்து பாதித்தது.

அப்பகுதிக்கு சென்ற ஊட்டி தீயணைப்புத் துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் ஊட்டி - கூடலூர் சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நேற்று அதிகாலை ஊட்டி - கூடலூர் சாலையில் ஸ்கூல் மந்து பகுதியில் மீண்டும் ஒரு ராட்சத மரம் விழுந்தது. இதனால், மீண்டும் இவ்வழித்தடத்தில் மீண்டும்  ேபாக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தீயணைப்புத்துறையினர் அகற்றினர். இதன் காரணாக ேநற்று அதிகாலையும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஊட்டி - கூடலூர் வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாரல் மழையால் ஊட்டியில் குளிர் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு மி.மீ.,ல்: ஊட்டி 4, நடுவட்டம் 19, கிளன்மார்கன் 10, எமரால்டு 14, அவலாஞ்சி 34, அப்பர்பவானி 46, கூடலூர் 17, பந்தலூர் 53.

பந்தலூர்: பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில்  அதிகப்படியான மழை பந்தலூரில் 90 மிமீ மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து நேற்றும் கனமழை பெய்ததுது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.  

பந்தலூர் அருகே கூடலூரில் இருந்து கேரளா மாநிலம் மலப்புரம் பகுதிக்கு செல்லும்  கீழ்நாடுகாணி பகுதியில் தமிழக கேரளா எல்லைப்பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த நீலகிரி நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் தனிப்பிரிவு ஏட்டு ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். அதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories: