கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் ஒன்றிய அரசு வெற்று பெருமைக்காக பல அறிவிப்புகளை வெளியிடுகிறது : ப.சிதம்பரம் சாடல்!!

டெல்லி : பணவீக்கம், எரிபொருள் விலை உயர்வு போன்றவற்றிற்கு ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளுக்கு தகுதியற்ற மேலாண்மையும் தான் காரணம் என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய ப.சிதம்பரம், ஒன்றிய அரசுடனான பெட்ரோல், டீசல், சமையல் கேஸ், உள்ளிட்டவற்றின் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தல்களின் போது. பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பதாக மாநில அரசுகள் உறுதி அளித்தாலும் அவர்களால் குறைந்த அளவே விலை குறைப்பு செய்ய முடியும் என்று சிதம்பரம் கூறினார்.ஆனால் பெரும் தொகையை ஒன்றிய அரசால் மட்டுமே குறைக்க முடியும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், நுகர்வோர் விலை பணவீக்கம் 6.25% ஆக உயர்ந்து இருப்பதாகவும் பெருந்தொற்று காலத்தில் இது மக்களின் முதுகெலும்பை உடைத்துவிட்டதாகவும் வேதனை தெரிவித்தார். ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளை இதற்கு காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் ஒன்றிய அரசு வெற்று பெருமைக்காக பல அறிவிப்புகளை வெளியிடுவதாக சாடினார்.டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி என்பது சாத்தியமில்லை என்ற அவர், புதிய சுகாதாரத்துறை அமைச்சர் இது குறித்த உண்மைகளை விளக்க வேண்டும் என்றார்

Related Stories: