கடமலை-மயிலை ஒன்றியத்தில் பருத்தி சாகுபடி அமோகம்

வருசநாடு : கடமலை-மயிலை ஒன்றியத்தில் பருத்தி அமோகமாக விளைந்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள கண்டமனூர், எட்டப்பராஜபுரம், கணேசபுரம், அண்ணாநகர், துரைச்சாமிபுரம், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, நரியூத்து, வருசநாடு ,தும்மக்குண்டு உள்ளிட்ட கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பருத்தி சாகுபடி நடைபெற்று வருகிறது. கடமலைக்குண்டு வேளாண்மைத்துறை அதிகாரிகள், விவசாய நிலங்களுக்குச் சென்று பருத்தி பயிர்களுக்கு தேவையான அனைத்து இடு பொருட்களையும் வழங்கி வருகின்றனர். மேலும் பருத்தி சாகுபடி குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்தாண்டு பருத்தி நன்றாக விளைந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுபற்றி கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்த விவசாயி ரமேஷ் கூறுகையில், ‘கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பருத்தி சாகுபடி அதிகமாக உள்ளது. முதற்கட்டமாக இப்பகுதியில் பருத்தி சாகுபடி அதிகமாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடமலை-மயிலை ஒன்றியத்தில் சூறைக்காற்று அதிகமாக வீசுவதால், சில இடங்களில் பருத்தி செடிகள் பாதிப்படைந்துள்ளன. இவைகளை, வேளாண்மைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் இதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: