தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலை காவலர்களுக்கு 26ம் தேதி உடற்தகுதி தேர்வு: 20 மையங்களில் நடக்கிறது

வேலூர்: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பாக இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்புத்துறை காவலர் என மொத்தம் 10,906 காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த டிசம்பர் 13ம்தேதி நடந்தது. இதையடுத்து உடற்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுகள் கடந்த ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா 2ம் அலை பரவியதால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.  இதற்கிடையில் கடந்த வாரம் ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. அதில், தமிழக காவல் துறையில் 2ம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்புத்துறை வீரர்களை தேர்வு செய்வதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் அளவீடு சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் 26ம்தேதி மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணி, மாநிலம் முழுவதும் 40 மையங்களில் நடத்தப்பட இருந்தது. எனவே அதற்கான இடத்தை உறுதிப்படுத்தி வரும் 7ம் தேதிக்குள் சீருடை பணியாளர் தேர்வாணையத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் 40 மையங்களில் உடற்தகுதி தேர்வு நடத்த போதுமான இடவசதி இல்லை, தேர்வு செய்வதற்கான பணியாளர்கள் பற்றாக்குறை, உபகரணங்கள் இல்லை என்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் 20 மையங்களில் தேர்வு நடத்த ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், எந்ெதந்த மையங்களில் எந்ெதந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம் என்ற விவரம் ஓரிரு நாளில்  வெளியாகும் என்றனர்.

Related Stories: