விண்வெளி சுற்றுலாவில் புதிய அத்யாயம்!: பெசோஸ், எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளி பிரிட்டன் தொழிலதிபர் பிரான்சன் அசத்தல்..!!

லண்டன்: மனிதர்களுக்கு விண்வெளி சுற்றுலாவிற்கான கதவுகளை அகல திறந்திருக்கிறார் கடலூரை பூர்வீகமாக கொண்ட பிரிட்டன் கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன். தமது விர்ஜிக் கேலக்டிக் நிறுவன விண்கலம் மூலம் வெற்றிகரமாக விண்வெளிக்கு சென்று திரும்பி சரித்தர சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். இது புதிய சகாப்தத்தின் விடியல். விண்வெளியில் அடுத்த பாய்ச்சலுக்கு மனித இனம் தயாராகிவிட்டது என்பதற்கு கடியல் கூறும் விடியல் இது. அமெரிக்காவின் ஸ்பேஸ் போக் தலத்தில் விர்ஜிக் கேலக்டிக் நிறுவனத்தின் வி.எஸ்.எஸ். யூனிட்டி - 22 விண்கலத்தை சுமந்துக்கொண்டு வானில் பறக்க வி.எம்.எஸ். யூ ஜெட் விமானம் தயாராகி இருந்தது.

விர்ஜிக் கேலக்டிக் நிறுவனர் ரிச்சர்ட் பிரான்சன், இந்திய வம்சாவழி பெண்ணான ஸ்ரீஷா பாண்டா உள்ளிட்ட 4 பேரும், 2 பைலட்டுகளும் விண்வெளிக்கு செல்லும் உற்சாகத்தோடு இருந்தனர். மோசமான வானிலையால் பயணம் சுமார் ஒன்றரை மணி நேரம் தள்ளிப்போக இந்திய நேரப்படி இரவு 8:14 மணிக்கு 6 பேருடன் தயாராகி இருந்த வி.எஸ்.எஸ். யூனிட்டி விண்கலத்தை சுமந்துக்கொண்டு வி.எம்.எஸ். யூ ஜெட் பயணத்தை தொடங்கியது. சுமார் 46 ஆயிரம் அடி உயரத்தை எட்டியதும் வி.எம்.எஸ். யூ ஜெட், வி.எஸ்.எஸ். யூனிட்டி விண்கலத்தை வானில் விடுவித்தது. வி.எம்.எஸ். யூ ஜெட் விமானத்தில் இருந்து விடுபட்டதும் வி.எஸ்.எஸ். யூனிட்டி - 22 விண்கலத்தில் இருந்து பைலட்டுகள் ராக்கெட் எஞ்சினை இயக்கி விண்கலத்தை மேல்நோக்கி செலுத்தினர்.

தொடர்ந்து மேல்நோக்கி முன்னேறிய வி.எஸ்.எஸ். யூனிட்டி - 22 விண்கலம், உச்சபட்சமாக 85.9 கிலோ மீட்டர் அதாவது 2 லட்சத்து 82 ஆயிரம் அடி உயரத்தை எட்டியபோது அதிலிருந்த 6 பேரும் எதிர்பார்த்திருந்த அந்த தருணம் வந்தது. வளிமண்டலத்திற்கு அப்பால் புவியீர்ப்பு விசையின் விளிம்பில் பேரண்டத்தில் யாதுமற்ற வெற்றிடம் தொடங்கும் புள்ளிக்கு மிக அருகில் வி.எஸ்.எஸ். யூனிட்டி - 22 விண்கலம் சுமார் 4 நிமிடங்கள் இருந்தது. கலத்திற்குள் இருந்த 6 பேரும் இருக்கைகளுடன் தங்களை இணைத்திருந்த பெல்ட்டுகளை கழற்றிவிட்டு உள்ளேயே உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். ஒரேநேரத்தில் பேரண்டத்தின் கருமையையும், பூமி பந்தின் வளைவையும் அவர்கள் கண்டு மகிழ்ந்தனர். விண்வெளிக்கு பாய்ந்ததன் நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய வி.எஸ்.எஸ். யூனிட்டி - 22 விண்கலம் பின்னர் புவியை நோக்கிய பயணத்தை தொடங்கியது.

புவியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்ததும் தீ பிழம்புகளை கக்கியபடி கலத்தை நோக்கி கீழ் நோக்கி வந்தது. பூமியில் இருந்து புறப்பட்ட அதேதளத்தில் சரியாக ஒன்றரை மணி நேரத்தில் ரிச்சர்ட் பிரான்சன் உள்ளிட்ட 6 பேரும் வி.எஸ்.எஸ். யூனிட்டி - 22 விண்கலத்தில் பத்திரமாக தரையிறங்கினர். பூமியில் மீண்டும் கால் பதித்ததும் குடும்பத்தினருடன் ரிச்சர்ட் பிரான்சன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். இது வாழ்நாள் அனுபவம். சிறுவயது கனவு நனவானது என்று உற்சாகம் பொங்க அவர் கூறினார். விண்வெளி சுற்றுலா கனவுடன் 2004ம் ஆண்டு விர்ஜிக் கேலக்டிக் நிறுவனத்தை தொடங்கிய ரிச்சர்ட் பிரான்சன், 17 ஆண்டுகள் கடும் உழைப்பாலும், விடா முயற்சியாலும் தமது சிறுவயது கனவை நினைவாக்கியுள்ளார்.

அத்துடன் உலகின் முதல் 2 பணக்காரர்களும் விண்வெளி சுற்றுலா போட்டியாளர்களுமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், அமேசான் மற்றும் புளு வெர்ஜின் நிறுவனர் பெசோஸை முந்தி அவர் அசத்தியுள்ளார். விண்வெளி சுற்றுலாவில் புதிய சகாப்தத்தை படைத்துள்ள ரிச்சர்ட் பிரான்சன், தம் கடலூருடன் நெருங்கிய தொடர்புடையவர் என்பது நமக்கும் பெரும் தரும் விஷயம்.

Related Stories: