தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சீர்காழி: தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலையூரில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பூம்புகார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழக முதல்வரின் ஆலோசனையின் பேரில் இந்து சமய அறநிலையதுறையின் கீழ் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளை ஆய்வு செய்து வருகிறோம்.

இக்கல்லூரியில் 2000க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களின் குழந்தைகள் பயின்று வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் இந்த கல்லூரி கேட்பாரற்று படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்துள்ளது. ஆய்வின்போது போதிய ஆசிரியர்கள், பணியாளர்கள் இல்லை என்று தெரியவந்துள்ளது. தேவையான நிதியை பெற்று தனியார் கல்லூரி, பள்ளிகளைவிட இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் கல்லூரி மற்றும் பள்ளிகளில் தரம் உயர்ந்த கல்வியை தரும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இதற்கு மாணவர்கள், பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுமா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்பாக ஆய்வுக்கூட்டங்கள் நடத்தியுள்ளோம். இதுதொடர்பாக முதல்வர் தனிகவனம் எடுத்து வருகிறார். தகுந்த நேரத்தில் தகுந்த நடவடிக்கை பாயும் என்றார்.

Related Stories: