மக்கள் தொகை பெருக்கம் வளர்ச்சிக்கு பெரும் தடை: உபி முதல்வர் யோகி கவலை

லக்னோ: உத்தர  பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், இம்மாநில பாஜ முதல்வர் யோகி ஆதித்யநாத் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டத்தை அவர் கொண்டு வர உள்ளார். இதில், 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு  அரசு வேலை உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் பறிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, லக்னோவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய யோகி, உபி.யின் ‘மக்கள் தொகை கட்டுப்பாட்டு கொள்ளை  2021-203’ஐ வெளியிட்டார். அதில் பேசிய அவர்,  ‘‘உலகம் முழுவதும் மக்கள் தொகை அதிகரிப்பது, வளர்ச்சிக்கு பெரிய தடையாக இருப்பதாக கவலை தெரிவிக்கப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளாக மக்கள்தொகை பெருக்கம் குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. மக்களை தொகையை கட்டுப்படுத்திய நாடுகளில் நல்ல முடிவுகளை பெற்றுள்ளன,’’ என்றார்.

Related Stories: