ஜோலார்பேட்டை அருகே அதிசயம்; வேப்பமரத்தில் பச்சைநிற பாம்பு உருவ கிளை: பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டனர்

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த புள்ளானேரி ஊராட்சி, அன்பழகன் நகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு பெரியாண்டவர் கோயில் கட்டுவதற்காக வெளியிலிருந்து பெரியாண்டவர் சிலை வாங்கி வந்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். ஒவ்வொரு வீட்டின் அருகே சிலைக்கு பூஜை செய்து வழிபட்டனர். அப்போது, பூஜைக்காக ஒருவர் அங்குள்ள மாரியம்மன் கோயில் அருகில் உள்ள வேப்ப மரத்தின் வேப்பிலை பறித்து வர சென்றுள்ளார். மரக்கிளையில் பச்சை நிற வடிவில் பாம்பு உருவம் பதித்ததுபோன்று தொங்கிய நிலையில் ேவப்பமரம் வளர்ந்திருந்தது.

இதைக் கண்ட அவர் அதிசயித்தபடி ஓடி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் சென்று பார்த்தபோது, பச்சை நிறத்தில் பாம்பு படம் எடுப்பது போன்று நீளமாக மரக்கிளையில் தொங்கி இருப்பது கண்டு ஆச்சரியமடைந்தனர்.இதனையடுத்து பெரியாண்டவர் சிலை ஊர்வல  பூஜைக்கு வரும்போது வேப்பமரத்துக்கும் சேர்த்து அப்பகுதி பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் ‘கடந்த 10 தினங்களுக்கு முன்பு வேப்ப மரத்தின் அருகில் உள்ள வீடு ஒன்றில் பாம்பு நுழைந்ததை கண்டு பயந்து போய் அந்த பாம்பை அடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது.

மேலும், அதற்கு ஜோடியான பாம்பு ஒன்று அதே பகுதியில் சுற்றித்திரிந்து வருவதாகவும் கூறுகின்றனர். இந்நிலையில் வீட்டின் அருகாமையில் இருந்த வேப்ப மரத்தில் பச்சை நிறத்தில் பாம்பு உருவம் தொங்கிய நிலையில் இருப்பதால் அந்த பாம்பு ஆத்மா தான் இது போன்று காட்சி அளிக்கிறதா? என ஆச்சரியம் அடைந்துள்ளனர். மேலும் அங்குள்ளவர்கள் தவறை உணர்ந்து தற்போது நாள்தோறும் வேப்ப மரத்திற்கு பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். இதனை ஜோலார்பேட்டை சுற்றுப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிசயத்துடன் பார்த்துவிட்டு செல்கின்றனர்.

Related Stories: