மாஸ்க் அணியாதவர்களுக்கு 8 நாள் சிறை: மணாலியில் அதிரடி

சிம்லா: கொரோனா ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த மக்கள், ‘ரிலாக்ஸ்’ செய்வதற்காக குளுகுளு மலை பிரதேசங்கள், சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்த இடங்களில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி போன்ற  கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்படுவதால், கொரோனா 2வது அலை மீண்டும் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஒன்றிய அரசு சில தினங்களுக்கு முன் எச்சரித்தது. இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான மணாலியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக முகக்கவசம் இல்லாமல் செல்லும் வீடியோ காட்சி, வைரலானது. இதைத் தொடர்ந்து, முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது 8 நாள் சிறை தண்டனை என்ற கடுமையான சட்டம், மணாலியில் கொண்டு வரப்பட்டுள்ளது.

Related Stories: