சிங்காடிவாக்கம் ஊராட்சியில் சிதிலமடைந்த கால்நடை நீர்த்தேக்கத் தொட்டி

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம், சிங்காடிவாக்கம் ஊராட்சியில் அமைக்கப்பட்ட கால்நடை நீர்த்தேக்க தொட்டி, முறையாக பராமரிக்காமல் சிதிலமடைந்துள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வாலாஜாபாத் ஒன்றியம் சிங்காடிவாக்கம் ஊராட்சியில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் இ - சேவை மையம், ஆரம்பப்பள்ளி, அங்கன்வாடி மையம், கிராம நிர்வாக அலுவலகம், உள்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. இங்குள்ள மக்களின் பிரதான தொழில் கால்நடை வளர்த்தல், விவசாயம்.  ஊராட்சியில் உள்ள கால்நடைகள் மேய்ச்சலுக்கு சென்று வீடு திரும்பும்போது, அதன் தாகத்தை போக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கால்நடை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.

இதனை, ஊராட்சி நிர்வாகம் சார்பில் முறையாக பராமரிக்கவில்லை. இதனால், தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால், மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள், தொட்டியில் தண்ணீர் இல்லாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றன.சிங்காடிவாக்கம் ஊராட்சியில் கால்நடைகளுக்காக ஊராட்சியின் வயல்வெளி பகுதியில் நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. ஆனால், கட்டிய நாள் முதல் இதுவரை எந்தவித பயன்பாடின்றி உள்ளது. இந்த தொட்டி முழுவதும் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு, பழுதடைந்து காணப்படுகிறது. இதனை, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும். அதேபோல், இங்குள்ள அரசு கட்டிடங்களை முறையாக பயன்படுத்தவும், மழைநீர் வடிக்கால்வாய் புதிதாக அமைத்து தர வேண்டும் என்றனர்.

Related Stories: