துபாய் துறைமுகத்தில் சரக்கு கப்பல் வெடித்து தீ: 25 கிமீ வரை அதிர்ந்தது

துபாய்: துபாயில் உலகின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றான ஜெபல் அலி துறைமுகம் உள்ளது. இது, உலகின் மிகப்பெரிய கன்டெய்னர் போக்குவரத்து துறைமுகமாக விளங்குகிறது. இந்திய துணை கண்டம், ஆப்ரிக்கா, ஆசிய கண்டங்களின் முக்கிய போக்குவரத்து தளமாகவும் உள்ளது. இங்கு 130 கன்டெய்னர்களுடன் நிறுத்தப்பட்ட சிறிய ரக சரக்கு கப்பல் நேற்று திடீரென பெரும் சத்தத்துடன் வெடித்து, தீப்பிடித்து எரியத் தொடங்கியது. துபாயில் உள்ள பெரிய கட்டிடங்களும் இதில் குலுங்கின. ஜன்னல்கள் நொறுங்கின. இதில் இருந்து கிளம்பிய நெருப்பும், புகையும் 15 கிலோ மீட்டர் வரை தெரிந்தது. இந்த சம்பவத்தில் யாரும் பாதிக்கப்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. தீயணைப்பு படையினர் 2 மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை அணைத்தனர். கப்பலில் வெடித்தது என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: