குன்னூரில் குப்பை வண்டியில் தூய்மை பணியாளர்கள் பயணம்

குன்னூர் :  நீலகிரி மாவட்டம்  குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில்  தினசரி 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நகரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தொற்றிற்கு எதிராக, களம் காணும் ஊழியர்களை அரசு நிர்வாகங்கள் கூடுதல் பாதுகாப்புடன் நடத்தி வருகின்றது. இதற்கு எதிர்மாறாக, குன்னூர் நகராட்சியில்  தூய்மைப் பணியாளர்களின் சுகாதார பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி, அன்றாடம் தூய்மை பணிக்கு குப்பைகளை அள்ளிச் செல்லும் வாகனத்தில் கூட்டமாக ஏற்றிச் செல்லும் அவலம் சமூக ஆர்வலர்களை கொதிப்படையச் செய்துள்ளது.  

இந்தப் பணிகளை மேற்கொள்ள ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அழைத்துச்செல்ல முறையான வாகனங்களை ஏற்பாடு செய்யாமல், நகராட்சிக்கு சொந்தமான குப்பை வாகனங்களில் ஏற்றிச் செல்லும் அவலநிலை நாள்தோறும் அரங்கேறுகின்றன. ஒரு வாகனத்தில் பணியாளர்களை கூட்டமாக ஏற்றிச் செல்வதால் இவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Related Stories: