2014ம் ஆண்டு மோடி அரசு பதவியேற்ற பின் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் ஜீரோவாக குறைந்துள்ளது :ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன் பேட்டி!!

டெல்லி : மோடி அரசு பதவியேற்ற பின் மீனவர்கள் மீதான தாக்குதல் நின்றுவிட்டது என்று ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஒன்றிய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சராக எல்.முருகன் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்திற்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பிரதமர் மோடி கொடுத்துள்ளார்.தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் அமைச்சரவையில் இடம் பெறுவேன்.தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பாலமாக இருந்து செயல்படுவேன்.

2014 ம் ஆண்டு மோடி அரசு பதவியேற்ற பின் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் ஜீரோவாக முற்றிலும் குறைந்துள்ளது. மீனவர்களின் நலன் காப்பதில் எந்த சமரசமும் இன்றி ஒன்றிய அரசு செயல்படும்.  மீனவர்கள் எல்லை தாண்டும் போதுதான் தாக்கப்படுகிறார்கள்.மீனவர்களின் நலனுக்காக ஒன்றிய அரசு செயல்படும், என்றார். தொடர்ந்து தமிழக பாஜக தலைவராக நீங்கள் பதவியில் தொடர்வீரா என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழக பாஜக தலைவர் குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும் என்று பதிலளித்தார்.

Related Stories: