போர்ட்டோ பிரின்ஸ்: ஹைதி நாட்டின் அதிபர் ஜோவினெல் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கரீபியன் நாடான ஹைதியில் தற்போது அரசியல் மற்றும் பொருளாதார நிலையற்ற தன்மை நிலவி வருகின்றது. மேலும், இங்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதிபர் ஜோவினெல் மொய்சி தனியார் குடியிருப்பில் தங்கி இருந்தார். இந்நிலையில், அடையாளம் தெரியாத கும்பலால் நேற்று முன்தினம் இரவு அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.