இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரை காண ரசிகர்கள் 100% அனுமதி!: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

லண்டன்: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரை காண ரசிகர்கள் 100 சதவீதம் அனுமதிக்கப்படுவர் என்று  பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்துடன் 5 போட்டிகளை  கொண்ட தொடரில் அந்நாட்டில் விளையாடவுள்ளது. நாட்டிங்காமில் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் கொரோனா பரவலை ஒட்டி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தளர்த்தியுள்ளது.

அதன்படி இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டிகளை காண ரசிகர்கள் முழு அளவில் அனுமதிக்கப்படுவர் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். அதற்கு முன்னரே அதாவது ஜூலை 19ம் தேதியுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும், அதுகுறித்து அடுத்த வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். அதேசமயம் கொரோனா பேரிடர் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் பிரதமர் போரிஸ் ஜான்சன் அந்நாட்டு மக்களை எச்சரித்துள்ளார்.

Related Stories: