விருதுநகர்: விருதுநகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராகவேந்திரன். விருதுநகர் கலெக்டர், எஸ்பி அலுவலகங்களில் ேநற்று புகார் மனுவை அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது: விருதுநகர் மீனாம்பிகை பங்களா பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறேன். செவல்பட்டியை சேர்ந்த தவசேகர், அப்போது அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜியிடம் உதவியாளராக உள்ளேன் என என்னிடம் கூறினார். மேலும், ரூ.5 லட்சத்தை ராஜேந்திர பாலாஜியிடம் கொடுத்தால், உங்களின் மனைவிக்கு நர்ஸ் வேலைக்கான ஆர்டர் ஒரு மாதத்தில் வந்து விடும் எனக் கூறினார். அதை நம்பி மனைவியின் நகைகளை அடகு வைத்து ரூ.3 லட்சத்தை கடந்த 22.8.2020ல் கொடுத்தேன். ஆனால், இதுவரை வேலைக்கான ஆர்டர் தரவில்லை.