நெதர்லாந்து, அமெரிக்காவிலிருந்து கடத்திய போதைப்பொருள் பறிமுதல்

சென்னை: அமெரிக்காவிலிருந்து சரக்கு விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்னை பழைய விமான நிலையத்திற்கு வந்தது. அதில் நெதர்லாந்திலிருந்து  ஒரு பார்சல் சென்னை முகவரிக்கு வந்தது. அதன்மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அதில் இருந்த முகவரியை ஆய்வு செய்தனர். அது, போலியென தெரியவந்தது. இதையடுத்து பார்சலை பிரித்து பார்த்தபோது, 15 கிராம் மெத்தம் பெட்டமின் என்ற போதை பவுடர் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.1.5 லட்சம். அதை பறிமுதல் செய்தனர். இதேபோல், அமெரிக்காவிலிருந்து சேலம் முகவரிக்கு வந்திருந்த மற்றொரு பார்சலை ஆய்வு செய்தனர். அதில் முக்கிய ஆவணங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த பார்சலையும் சந்தேகத்தின் பேரில் பிரித்து பார்த்தபோது, உயர்வகை கஞ்சா 100 கிராம் இருப்பது தெரிந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.80 ஆயிரம். அதை பறிமுதல் செய்தனர். இந்த பார்சலும் போலி முகவரியில் வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: