கருத்து சொன்னால் பகிரங்கமாக மிரட்டுவதா? பாஜ நடவடிக்கைக்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: பாஜ அரசால் கொண்டு வரப்பட்டுள்ள ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா 2021 என்பது நேரடியாக படைப்பாளிகள் மீதும், திரைப்படம் உள்ளிட்ட ஒளிப்பதிவு படைப்புகளின் மீதும் கொண்டு வரப்பட்டுள்ள நேரடியான தாக்குதலாகும். இப்பின்னணியில் தமிழக திரைக்கலைஞர் சூர்யா, “சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்காகவே இருக்க வேண்டுமேயல்லாது, அதன் குரல் வளையை நெறிப்பதாக இருக்கக் கூடாது” என தனது கருத்தை டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார். ஜனநாயக ரீதியாக தனது கருத்தை சமூக ஊடகத்தின் வாயிலாக பதிவு செய்த திரைக்கலைஞர் சூர்யாவிற்கு, பாஜ இளைஞர் அணியினரின் கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என பகிரங்க எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது. பாஜவின் இத்தகைய அணுகுமுறையும், பகிரங்க மிரட்டல் போக்குகளும் ஒரு போதும் ஏற்கத்தக்கவையல்ல என்பதோடு, ஜனநாயகத்திற்கும், கருத்துரிமைக்கும் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது.

Related Stories: