மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு கட்டும் புதிய அணை: கட்டுமானப் பணியில் தமிழக தொழிலாளர்கள்..!!

பெங்களூரு: மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு கட்டிய புதிய அணைக்கான கட்டுமான பணிகளில் தமிழகத்தை சேர்ந்த 25 நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து பணியாற்றி இருப்பது தெரியவந்துள்ளது. கர்நாடக வனப்பகுதியை ஒட்டியுள்ள யார்கோல் என்ற இடத்தில் மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணை கட்டி வருகிறது. இந்த அணை கட்டும் பணிகளில் ஹைதராபாத்தை சார்ந்த தனியார் நிறுவனம் ஒப்பந்தம் போட்டிருந்தது. இந்நிலையில், இந்த பணிக்காக சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த 25 கட்டுமான நிறுவனங்கள் துணை ஒப்பந்ததாரர்களாக பல்வேறு பணியில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் ஓசூர், தளி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்து மணல், ஜல்லிகள், சிமெண்ட், இரும்பு கம்பிகள், எம்.சாண்ட் மணல் அனுப்பப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்டிட தொழிலாளர்கள் அழைத்து செல்லப்பட்டு அணை கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகம் கட்டியுள்ள புதிய அணைக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கர்நாடக அரசின் புதிய அணையால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர் ஆகிய 6 மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: