பிலிப்பைன்சில் விமான விபத்து 45 வீரர்கள் பலி

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் சுலு மாகாணத்தில் அபு சயாப் என்ற இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும், பிலிப்பைன்ஸ் படைகளுக்கும் பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. எனவே, அங்கு பாதுகாப்பு பணிக்காக ராணுவ வீரர்கள் கூடுதலாக அனுப்பப்படுவது வழக்கம். அதன்படி, தெற்கு ககயான் பகுதியில் இருந்து சுலு மாகாணத்துக்கு, ராணுவ வீரர்கள் நேற்று விமானத்தில் அனுப்பப்பட்டனர். அமெரிக்காவின் லாக்ஹீட் சி-130 போர் விமானத்தில் 92 வீரர்கள் சென்றனர். இவர்களுடன் 3 விமானிகளும், 5 விமானப் பணியாளர்களும் சென்றனர். பங்கல் என்ற இடத்தில் நேற்று காலை விமானத்தை தரையிறக்க விமானி முயன்றுள்ளார். அப்போது ஏற்பட்ட விபத்தில் விமானம் வெடித்துள்ளது. இதில் 45 வீரர்கள் பலியாகி உள்ளனர். 49 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. மத்திய பிலிப்பைன்சில் மழை பெய்து வருகிறது. இதனால், தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விமானம் வழுக்கி சென்றதால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.

Related Stories: