கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்!: ஒன்றிய சுகாதாரத்துறை முதன்முறையாக அனுமதி

டெல்லி: கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என ஒன்றிய சுகாதாரத்துறை முதன்முறையாக அனுமதி வழங்கியுள்ளது. தடுப்பூசி தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனையை ஏற்று கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் முடிவு குறித்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்திருக்கிறது. கர்ப்ப காலத்தில் கொரோனா வைரஸ் தாக்கினால் கர்ப்பிணிகள் உடல்நிலை அதிகம் பாதிக்கப்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேபோல் கொரோனா தொற்றால் கர்ப்பிணிகளுக்கு வேறு தீவிர நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Related Stories: