சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பழம்பெரும் நடிகரும், கர்நாடக சங்கீத பாடகருமாகத் திகழ்ந்த எம்.கே. தியாகராஜ பாகவதரின் மகள் வழிப்பேரன் .சாய்ராம் மற்றும் அவரது குடும்பத்தினர், தற்போது மிகவும் வறிய நிலையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு, அவருக்கு அரசு சார்பில், குறைந்த வாடகையில் சென்னையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு வீடு ஒன்றினையும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கவும் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.