ரூ.17 கோடியை ஒப்படைத்தார் நீரவ் மோடி சகோதரி

புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வாங்கியில் ரூ.13,500 கோடி கடன் வாங்கி மோசடி செய்து விட்டு இஙகிலாந்துக்கு தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி, அங்கு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி வருவதற்கான நீதிமன்ற நடைமுறை, இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நீரவ் மோடியின் சகோதரி பூர்வி மோடி, அரசு தரப்பு அப்ரூவராக மாறினார். மோசடி பற்றிய விவரங்களை சிபிஐ, அமலாக்கத் துறைக்கு அவர் அளித்தார். இதனால், அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், லண்டனில் உள்ள வங்கியில் தனது பெயரில் நீரவ் மோடி கணக்கு தொடங்கி அதில் ரூ.17.25 கோடி போட்டு வைத்திருந்த தகவல், அந்த வங்கி அனுப்பிய கடிதத்தின் மூலம் சமீபத்தில் பூர்விக்கு தெரிய வந்தது. இந்த தகவலை அமலாக்கத் துறையிடம் தெரிவித்த அவர், அந்த பணத்தை அரசின் கணக்கிற்கு மாற்றம் செய்து ஒப்படைத்துள்ளார்.

Related Stories: