நெல்லை டவுனில் புதிய நகைக் கடை `போத்தீஸ் ஸ்வர்ண மஹால்’ கோலாகலமாக திறப்பு: 150 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

நெல்லை: கடந்த 4 தலைமுறைகளாக ஜவுளி விற்பனையில்  புகழ்பெற்ற நிறுவனம் போத்தீஸ். முதலில் வில்லிபுத்தூரில் தனது  விற்பனையகத்தை துவங்கிய இந்நிறுவனம் பின்னர் நெல்லை, சென்னை, மதுரை, கோவை,  திருச்சி, நாகர்கோவில், புதுச்சேரி, திருவனந்தபுரம், பெங்களூரு என தென்  இந்தியா முழுவதும் தனது விற்பனையகங்களை திறந்துள்ளது. இதுபோல் சென்னை, திருச்சி, நெல்லை உள்பட 11 இடங்களில் சூப்பர் மார்க்கெட்கள் உள்ளன. இந்நிலையில் முதன்முறையாக நெல்லை டவுன் போத்தீஸ் கடையை அடுத்த சத்தியமூர்த்தி தெருவின் துவக்கத்தில் ‘‘போத்தீஸ் ஸ்வர்ண மஹால்’ என்ற பெயரில் தங்க நகைக்கடையை துவக்கியுள்ளது. இதன்  திறப்பு விழா, நேற்று காலை கோலாகலமாக நடந்தது.

 போத்தீஸ் குழுமங்களின் தலைவர் எஸ்.வேலம்மாள் சடையாண்டி, கேவிபி  சடையாண்டி மூப்பனார் ஆகியோர்  திறந்து வைத்தனர். இதில்  போத்தீஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் ரமேஷ், போத்திராஜ், முருகேஷ்,   மகேஷ், அசோக், வருண், அஸ்வந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் முன்னாள்  மத்திய  அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், காங்கிரஸ் மாவட்ட தலைவர்  சங்கரபாண்டியன்  மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து  போத்தீஸ் ரமேஷ் கூறுகையில், நூற்றாண்டை நெருங்கும் போத்தீஸ் நிறுவனம், முதல்முறையாக தங்க நகை வியாபாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம்.  இந்த நிறுவனத்திற்கு ‘‘போத்தீஸ் ஸ்வர்ண மஹால்’ என்று பெயர் சூட்டியுள்ளோம்.  

மக்கள் என்றும் மதிக்கும் பூர்ண கும்பத்தை இதன் அடையாளச்  சின்னமாக்கியுள்ளோம். எங்களுடைய இந்த தங்க பயணத்தை திருநெல்வேலியில் இருந்து  துவங்குகிறோம். திறப்பு  விழாவையொட்டி 150 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்த ஏற்பாடு செய்திருந்தோம். கொரோனா தடுப்பு நடவடிக்கையால் நெல்லை சாப்டர் பள்ளியில்  இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் ஆகிய 3 ஜோடிகளுக்கு மட்டும் திருமணம் நடத்தி  வைக்கப்பட்டது. மற்ற ேஜாடிகளும் அவரவர் பகுதிகளில் அரசு  வழிகாட்டுதல்களின்படி  திருமணம் நடத்திக் கொண்டனர். ரூ.1 லட்சம்  மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் போத்தீஸ் நிறுவனம் சார்பில்  வழங்கப்படுகிறது  என்றார்.

Related Stories: