வந்தவாசி அருகே நெற்களம் அமைக்க பள்ளம் தோண்டியபோது பழங்கால சிவலிங்கம் கண்டெடுப்பு: கிராம மக்கள் பூஜை செய்து வழிபாடு

வந்தவாசி: வந்தவாசி அருகே நெற்களம் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டியபோது பழங்கால சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தில் நேற்று முன்தினம் நெற்களம் அமைப்பதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. சிறிதளவு பள்ளம் தோண்டியபோது 3 அடி உயரம் கொண்ட கல்லால் ஆன பழங்கால சிவலிங்கம் கண்ெடடுக்கப்பட்டது. அதில், ஆவுடையார் இல்லாமல் லிங்கம் மட்டுமே இருந்தது. இதைப்பார்த்து பரவசம் அடைந்த அப்பகுதி மக்கள், சிவலிங்கத்தை மீட்டு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டனர். ெதாடர்ந்து, ஊராட்சி தலைவர் புவனேஸ்வரி  செல்வம், ஒன்றிய கவுன்சிலர் கெம்புராஜ் ஆகியோர் வந்தவாசி தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், தாசில்தார் திருநாவுக்கரசு நேற்று நேரில் சென்று கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை பார்வையிட்டார்.தொடர்ந்து, சிவலிங்கத்தை எடுத்து செல்ல முற்பட்டபோது, அப்பகுதி மக்கள் அந்த சிவலிங்கத்தை அருகில் உள்ள ஈஸ்வரன் கோயிலில் வைத்து வழிபட அனுமதிக்க வேண்டும் என தாசில்தாரிடம் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து, சிவலிங்கம் ஈஸ்வரன் கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.சிலை கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு அருகே சுமார் 1,600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சாந்தநாயகி உடனுறை திருக்காமேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: