சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு மே. வங்கத்தில் 15,000 வன்முறை 7 ஆயிரம் பெண்கள் மானபங்கம்: ஒன்றிய அரசிடம் அறிக்கை

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு நடந்த வன்முறைகள் குறித்து ஒன்றிய அரசிடம் உண்மை கண்டறியும் குழு அறிக்கை அளித்துள்ளது. மேற்கு வங்க சட்டப்ேபரவை தேர்தல் முடிவு கடந்த மாதம் 2ம் தேதி வெளியானது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 3வது முறையாக அமோக வெற்றி பெற்று, மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றார். அன்று இரவில் இருந்து பாஜ நிர்வாகிகள், தொண்டர்கள் மீது திரிணாமுல் காங்கிரஸ் தாக்குதல் நடத்தி, வன்முறையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது பற்றி சிக்கிம் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பிரமோத் கோலி தலைமையிலான 5 பேர் கொண்ட, ‘கால் பார் ஜஸ்டிஸ்’ என்று அமைப்பின் உண்மை கண்டறியும் குழு ேமற்கு வங்கம் சென்று விசாரித்தது. இக்குழு தனது  அறிக்கையை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திடம் சமர்பித்துள்ளது.

இது பற்றி ஒன்றிய உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி நேற்று அளித்த பேட்டியில், ‘‘மேற்கு வங்கத்தில் ்தேர்தல் முடிவு வெளியான பிறகு மாநிலம் முழுவதும் 15 ஆயிரம் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 7 ஆயிரம் பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டுள்ளனர். 16 மாவட்டங்களில் அதிகளவில் வன்முறை நடந்துள்ளன. ஏராளமான மக்கள் தாக்குதலுக்கு பயந்து அண்டை மாநிலங்களுக்கு சென்று விட்டனர்’ என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது பற்றி ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கும்,’’ என்றார்.

தங்கை மீது நடவடிக்கை எடுக்க மாட்டேன்: ஆளுநர்

ஆளுநர் ஜெகதீப் தங்கார் ஊழல் பேர்வழி என்று முதல்வர் மம்தா நேற்று முன்தினம் குற்றஞ்சாட்டினார். இதற்கு நேற்று பதில் அளித்துள்ள தங்கார், ‘‘மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டு அதிர்ச்சி அளிக்கிறது. எனது பெயர் எந்த குற்றப் பத்திரிக்கையிலும் இடம் பெறவில்லை. இந்த குற்றச்சாட்டுக்காக  எனது இளைய சகோதரி  மீது நடவடிக்கை எடுக்க இந்திய கலாசாரம் என்னை அனுமதிக்கவில்லை. நான் எந்த சூழலிலும் பதற்றம் அடைய மாட்டேன்,’’ என்றார்.

Related Stories: