பறக்கும் தட்டுகளால் உலகுக்கு பெரும் அச்சுறுத்தல்: பென்டகன் அறிக்கை

பிரிஸ்பேன்: `பறக்கும் தட்டு மர்மம் குறித்து தெளிவான விளக்கம் அளிக்க முடியாது; அதே நேரம், அதனை வேற்றுகிரக வாசிகளுடையது என்பதை ஒப்புக் கொள்ளவும் முடியாது,’ என முதல் கட்ட ஆய்வறிக்கையையில் அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 1966ம் ஆண்டு, முதல் முறையாக வானில் பறக்கும் தட்டு போன்ற அடையாளம் தெரியாத மர்ம பொருள் (யூஎப்ஓ) பறந்ததை பார்த்ததாக விமானப்படையினர் தெரிவித்தனர்.  இதனிடையே, அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் கடற்படையினர் எடுத்த யூஎப்ஓ குறித்த 3 வீடியோக்களை வெளியிட்டு, இது குறித்து ஜூன் மாத இறுதியில் அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்தது.  அதன்படி, பென்டகன் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆயுத சேவைகள் குழுவுக்கு அளித்த 9 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2004 முதல் 2021ம் ஆண்டு வரை அமெரிக்க விமானப்படை யூஎப்ஓ குறித்து 144 அறிக்கைகள் வெளியிட்டுள்ளது. அவற்றில் 21 அறிக்கைகளில், பறக்கும் தட்டு புரியாத புதிராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.  இந்த பறக்கும் தட்டுகள், உயரத்தில் பறப்பது, காற்றுக்கு எதிராக நகர்வது, திடீரென சூழல்வது அல்லது குறிப்பிட்ட வேகத்தில் நகர்வது என்று எந்தவொரு  தெளிவான வழிமுறைகள் இல்லாமல் வானில் தோன்றி மறைந்தது. சில நேரங்களில் மட்டும், அவற்றில் இருந்து ரேடியோ அதிர்வலை வெளிப்பட்டதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், அவை காற்றினால் இயக்கப்படவில்லை என்பதும், அவற்றில் இருந்து ரேடியோ அதிர்வலை ஏற்பட்டதால், எலக்ட்ரோமேக்னடிக் மூலம் இயக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிய வருகிறது. ஆனால், இவை விமானங்களின் பாதுகாப்பு, தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. பறக்கும் தட்டு மர்மமாக இருப்பதால் அது குறித்து சரியாக அறிய முடியவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: