முறைகேடுகள் நடப்பதை தடுக்க குரூப்-1 நியமனத்துக்கும் நேர்முகத் தேர்வு ரத்து: ஆந்திராவின் ஜெகன் மோகன் உத்தரவு

விஜயவாடா: ஆந்திராவில் அரசுத் துறைகளுக்கு பணியாளர்களை நியமிப்பதற்காக, ஆந்திர மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. இதில், வெற்றி பெறுபவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு,  நியமன  உத்தரவு வழங்கப்பட்டு வந்தது.

இந்த நேர்முகத் தேர்வில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு இருந்ததால், கடந்த 2019ம் ஆண்டு துணை கலெக்டர்கள், டிஎஸ்பி,  துணை ஆணையர்கள் போன்ற உயர் அதிகாரிகள் நியமனத்துக்கான குருப் -1 பிரிவை தவிர, மற்று அனைத்து பிரிவுகளுக்காக நேர்முகத் தேர்வையும் முதல்வர் ஜெகன் மோகன் ரத்து செய்தார்.

இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு, அக்டோபர் 18ம் தேதி குரூப்-1 பிரிவுக்கான நேர்முகத் தேர்வையும் ரத்து செய்யும்படி அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதை ஏற்று, இந்த பிரிவுக்கான நேர்முகத் தேர்வையும் ஜெகன் மோகன் நேற்று ரத்து செய்தார். இதன்மூலம், பணியாளர் தேர்வாணையபோட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவோர், நேர்முகத் தேர்வின்றி இனிமேல் நேரடியாக பணி நியமனம் செய்யப்படுவார்கள். ‘இந்த முடிவின் மூலம், நியமனங்கள் வெளிப்படையாக இருக்கும். தேர்வு எழுதுபவர்களுக்கு நம்பிக்கை பிறக்கும்,’ என்று அதிகாரிகள் கூறினர்.

Related Stories: