லட்சத்தீவு சட்டங்கள் பற்றி சர்ச்சை கருத்து நடிகை சுல்தானாவுக்கு வெளிநாட்டு தொடர்பா?: செல்போனை பிடுங்கி போலீஸ் விசாரணை

திருவனந்தபுரம்: லட்சத்தீவு   குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நடிகை ஆயிஷா சுல்தானாவின் செல்போனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். லட்சத்தீவில் சர்ச்சைக்குரிய புதிய சட்டங்களை கொண்டு வந்த மத்திய அரசின் நிர்வாக அதிகாரிக்கு எதிராக  கருத்து   தெரிவித்ததை தொடர்ந்து நடிகை ஆயிஷா சுல்தானா மீது, கேரளாவில் உள்ள கவரத்தி  போலீசார் தேசத்   துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்.   இது தொடர்பாக ஏற்கனவே 3 முறை  போலீசார் அவரிடம் விசாரித்துள்ளனர். நேற்று முன்தினம் 4வது முறையாக  போலீசார்  விசாரணைக்கு அவர்   ஆஜரானார். பல மணி நேர விசார ணைக்குப் பிறகு  செல்போனை பறிமுதல் செய்து விட்டு,  போலீசார் அவரை அனுப்பி வைத்தனர்.  

இது குறித்து சுல்தானா கூறுகையில், ‘‘எனது செல்போனை   பறிமுதல் செய்த போலீசார். அதில் உள்ள ஒரு எண்ணை கூட குறித்து ெகாள்ள  அனுமதிக்கவில்லை இதனால், எனது தாயை கூட தொடர்பு  கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,’’  என்றார். இது குறித்து போலீசார் கூறுகையில், ‘சுல்தானாவுக்கு வெளிநாடுகளில்  உள்ளவர்களுடன் ஏதாவது வகையில் தொடர்பு  இருக்கிறதா? அல்லது பண பரிவர்த்தனை  உள்ளதா? என்பது  குறித்து விசாரிக்கவே, அவரது செல்போனை வாங்கி வைத்துள்ளோம்,’ என்றனர்.

Related Stories: