வளர்ச்சியின் புது வடிவமாக அயோத்தி மாற வேண்டும்: பிரதமர் மோடி விருப்பம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம்,  அயோத்தியில் ரூ.1200 கோடி செலவில் ராமர் கோயில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இதை உலகின் மிகப்பெரிய புனித தலமாக மாற்றுவதற்காக மிகப்பெரிய  ரயில் நிலையம், சர்வதேச விமான நிலையம் போன்றவை கட்டப்படுகின்றன. மேலும், சாலை வசதிகளும் உருவாக்கப்படுகிறது. இம்மாநிலத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருப்பதால், இந்த கோயில் கட்டுமான பணியை இம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் விரைவுப்படுத்தி இருக்கிறார். இதன்மூலம், ஓட்டுகளை வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அயோத்தியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் குறித்து பிரதமர் மோடி நேற்று காணொலி மூலமாக யோகியுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய மோடி, ‘நமது நாட்டு பாரம்பரியத்தின் சிறப்புகளை பிரதிபலிக்கும் வகையிலும், மேம்பாட்டு வளர்ச்சியின் புது வடிவமாகவும் அயோத்தி நகரம் அமைய வேண்டும்,’ என்று விருப்பம் தெரிவித்தார்.

Related Stories: