சிவகங்கை அருகே பாகனேரியில் ஊரடங்கை மீறி மஞ்சுவிரட்டு: 20 பேர் மீது வழக்கு பதிவு

சிவகங்கை: சிவகங்கை அருகே பாகனேரியில் ஊரடங்கை மீறி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகனேரியில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை நிறுத்துமாறு மதகுபட்டி போலீசார் வலியுறுத்தினர். ஊரடங்கு, போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி பாகனேரியில் மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாக 20 பேர் மீது மதகுபட்டி போலீஸ் வழக்கு பதிவு செய்தது.

Related Stories: